Sunday, January 23, 2011

அம்மா!

அம்மா அன்று வெட்டப்பட்ட தொப்புள் கொடி நம் உறவை முறிக்க அல்ல,

அது நம் பாசம் என்னும் வீட்டுக் கதவை திறக்க வெட்டப்பட்ட ரிப்பன்...

மாற்றம் வேண்டும்!


 

பிறக்கும் குழந்தைக்கு வெள்ளை/கருப்பு நிற வேறுபாடு மட்டும் தாண் தெரியுமாம்.
ஆனால்,
அவை வளரும் பொழுது நிறங்கள் இனமாக மாறுகிறது, இன மாற்றம் இன்னும் மாற்றம் பெருகிறது.
இந்த மாற்றம் கண்டிப்பாக மாற்றம் பெற வேண்டும்,
...இதுபோன்ற ஏற்றதாழ்வு ஏற்ப்படுத்தும் இந்த மாற்றத்தை தவிர்ப்போம்.

கண்ணீர் துளிகளுடன் கெவ்ஹார்டியை நினைக்கிரேன்....

இதுவும் காதல் தோல்வி தான்?

கின்னத்தில் அன்னத்தை வைத்து,
என் கன்னத்தை கிள்ளி,
அன்னத்தை ஊட்டிவிட நீ வருவாய் என
காத்து இருக்கிரேன்,
மாலை அனிந்த உன் புகைப்படத்தின் முன்பு.
...

அம்மா நீ எங்கே???????

 

 -ஜா. மஹாதீர் முஹமத்

இவர் தான் பெறியார்!!!!

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
...பார் அவர்தாம் பெரியார்.
-புரட்சிக்கவிஞர்.

நான் படித்த நல்ல கவிதை!

தோளில் சாய்ந்து கொண்டு
தோழமை வெளிப்படுத்துவாய்.
நெஞ்சில் சாய்ந்து கொண்டு
நேசம் வெளிப்படுத்துவாய்.
இடம் பொருள் அறிந்து
...நடத்தல் இதுதானோ?

ஒருமுறை கூட உன்னிடமிருந்து
திட்டுவாங்காமல் வாங்கியதில்லை
முத்தங்களை...
ஆனாலும் அப்படி கொடுத்தால்தான்
இனிப்பேன் என்று அடம்பிடிக்கிறது
முத்தங்களும்....

நீயும் செய்யவில்லை…
நானும் செய்யவில்லை…
நம்மைக்கொண்டு விளையாடிவிட்டு
நம்மையே பழிப்புகாட்டுகின்றன
சில்மிஷங்கள்

உன் இதழ்களுக்கு என்ன வேண்டும்?
இன்றாவது ஒழுங்காய்
என் இதழ்களிடம் சொல்ல சொல்..
அவைகளுக்கு உன் இதழ்கள்
சொல்வது சரியாய் கேட்பதே இல்லையாம்.

எப்போதும் என்னை
முறைத்துக்கொண்டே இருக்கும்
உன் ஆடைகளுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்?
அதை என்னிடம் விடு
நான் பார்த்துக்கொள்கிறேன் என
என்னை சமாதானம் செய்கின்றன
என்விரல்கள்

இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்...


Source: http://www.facebook.com/pages/en-tamil/158502987507709