Tuesday, November 15, 2011

அன்றில் பறவை


"தம்பி டீ போடட்டுமா?"
"இல்ல நா, பரவால நா இப்ப கிளம்பிடுவேன்"
"அது என்ன நு தெரியல பா, எல்லா வருஷத்தவிட இந்த வருஷம் நல்ல மழை"
சின்ன சிரிப்புடன் "ஹ்ம்ம்.. சரி நா மழை விடுர மாதிரி இருக்கு.. அப்ப நா வரேன்.."
"இந்த மழையை நம்பி போவாதப்பா, திடிர்னு புடிச்சிக்கும்…"
"இல்ல வண்டி வச்சி இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்ல நா" என்று சொல்லிக் கொண்டே எனது மூக்கு கண்னாடியை எடுத்தேன்.
"ரைட்டு, பார்த்து போங்க"

நான் வேளை பார்க்கும் தனியார் குழுமத்தில் 150ரூ கொடுத்து வாங்கிய உடைகள் நனைந்தாலும் பரவாயில்லை சீக்கிரம் வீடு திரும்பினால் நன்று என முடிவு செய்து புறப்பட்டேன்.
என் சொந்த ஊர் விட்டு வந்த இந்த ஏழு மாதத்தில் இது வரை இந்த சாலையை இவ்வளவு அமைதியாகவும் இருண்ட சூழுடனும் பார்த்தது இல்லை என நினைக்கும் தருனம், தேயிலை அண்ணனுக்கு கருத்த நாக்குத்தான் என நினைக்கும் படி மழை வேகமாக தொடங்கியது..

"ச்ச… இந்த மழை வந்தாலே இதே தொல்லைத்தான்" என்று மனப்பாட்டு(முனவி கொண்டு) பாடிக்கொண்டே விசையுந்தை வேகப் படுத்தினேன். அடிக்கும் மழையும் இடிக்கும் இடியும் ஒரு புதிய இசையாகவே தோனிற்று. பலத்த மின்னல் பகல் போலவே காட்சி அளிக்க, அந்த பகல் வெளிச்சத்தில் யாரோ ஒருவர் சாலையின் ஓரத்தில் மறைவதற்க்கு இடம் தேடி ஓடுவதுப் போல் தென்ப்பட்டது.
அவர் விசையுந்தை பார்த்ததும் "ஸ்டாப் ஸ்டாப்" என வழியிலே இரு கையையும் நீட்டி பயனத்தை பகிர்ந்துக் கொள்ளும் படி கேட்டார். வெள்ளை சட்டையும் அடர்ந்த தாடியுமாக இரு பற்கள் தெரியும் படி சினேகப்பூர்வமாக புண்ணகைத்தார்.
"சரி ஏறுங்க…" என்ற நான்.
"ரொம்ப நன்றி ஸார்"
மெதுவாக மரங்கள் பின் நோக்கி நகர ஆரம்பித்தவுடன்….
"இந்த ரோடு கடைசியில இரக்கி விட்டுடுங்க ஸார், அங்கிருந்து பக்கம்த்தான்." என்றார் வெள்ளை சட்டை.
"ஹ்ம்ம்..பரவாயில்லை வீட்டுலயே விட்டுடுரேன்." என்று பதில் கொடுக்க, ஒரு பெறிய மின்னலுடன் மழையும் வேகம் பிடித்தது.
"ஹப்பா நல்ல வெளிச்சம், பேசாம ஈ.பி. க்கு பில் கட்டுறதுக்கு பதிலா, வருட பகவானுக்கு(வருண பகவான்) கட்டலாம்." என்று சொல்லி புன்னகைத்தார்.
"ஸார், அந்த ரைட்டுல மூனாவது வீடு தான்" என தொடர்ந்தார்.
"ஹ்ம். சரி…" என்ற நான்,
"ஏன் ஸார் உங்க சொந்த ஊரே இது தானா?" என்று வினவ.
"இல்ல இல்ல திருச்சி, இங்க வந்து ஏழு மாசமாகுது"
"அப்படியா நா பொண் எடுத்ததும் அந்த ஊர் தாண்." என நெகிழ்ந்தார்.
"ஓஹ் திருச்சில எங்க?"
"அது எதோ மண்டபமோ என்னமோ…இங்க தாண் ஸார் இந்த வீடு தாண் நிறுத்துங்க.."
வெள்ளை சட்டை கீழே இறங்கி "வாங்க ஸார், ஒரு காபி சாப்டுட்டுப் போலாம்." பனிவாக.
"இல்ல இருக்கட்டும் பரவாயில்லை, ஸார்"
"அட இவ்வுளவு உதவி பன்னிட்டு கெளம்புரீங்க, மழை செத்த விடட்டும். உள்ள வாங்க ஸார்" என கையை பிடித்து கட்டாயப் படுத்தினார்…..
தவிர்ப்பதற்க்கு வேறு வழி இல்லாமல் உள்ளே செல்ல சம்மதித்தேன்.


"வாங்க வாங்க இந்த சோபாவுல உட்காருங்க, இதோ வரேன்…"
இருக்கையில் அமர்ந்தப் படி அந்த இல்லத்தை ரசித்துக் கொண்டு இருத்தேன்.
விறைவாக துவட்டுகுட்டை ஒன்றை எடுத்து வந்து "இந்தாங்க ஸார், யூஸ் பண்ணிக்கோங்க…. இந்தோ வந்துடுரேன்…" என்று ஒரு சிறிய அறையை நோக்கி சென் று. "என் பிரண்டு வந்து இருக்காரு, காப்பி போட்டு கொடு நா டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்." என்றார் தன் மனைவியிடம்.

"அவசரப் பட்டு வர சம்மத்திச்சமோ" என யோசித்துக் கொண்டே, எனது மூக்கு கண்ணாடியை துடைத்து கொண்டிருந்தேன்,
"காப்பி எடுத்துக்கோங்க!!.." அவர் மனைவி…
எதோ பழகிய குரல் போல, வெடுக்கெனு தலையை நிமிறித்து பார்த்தேன்…..

கால சக்கரம் பின்னே உருண்டன….
காதலின் சுகத்தை மட்டும் கண்ட எனக்கு, தொல்வியின் வழி, சுகத்தை விட பெறிய சுமையானது என்று புரிய வைத்து பறந்து சென்றவள். "இனி எதுவும் இல்லை" என்ற வார்த்தை மட்டும் நூறு மரணத்தை கொடுத்தது……
அன்றில் பறவைகளாக இருந்த எங்களை காதல், காலம் எனும் காரணத்தை காட்டி பிரித்தது…
அன்று முதல் பறவைகளாக் இருந்த எங்களை பறவையாக மாற்றியது….
நூறு முறை இறந்த காலத்தை விட்டு வெளியே வந்தேன்….

சில மனிதுளிகள் சென்றன……
வெள்ளை சட்டை வெளியே வந்து "எங்க மா உங்க ஊர்க்காரர்?"…
உதடுகள் துடிக்க "நா வரும் போழுதே அவர் இல்லைங்க.."
"சரியான அவசர காரர் போல, மூக்கு கண்ணாடியை கூட மறந்து வைச்சிட்டு போய்ட்டாரு….." என சொல்லி கொண்டே கண்ணாடியை எடுக்க, அதில் இருந்து ஒரு சொட்டு த(க)ண்ணீர் கீழே விழுந்து சிதறியது என் காதலை போல.…..


                                                இப்படிக்கு,
                                                காதலன்