"திருவான்மையூர் வந்துடுச்சா?"


காலை எழுந்ததுலேர்ந்து எல்லாத்துக்கும் லேட், குளிக்க,சாப்பிட, கிளம்ப எல்லாம் லேட்என முனவிகொண்டே சென்னை கடற்கரை இரயில் நிலயத்தில் எந்திர மனிதர்களோடு நானும் இரயிலில் ஏறினேன், நல்ல வேளை கூட்டம் இல்லை அரை மணி துளிகள் உட்கார்ந்து செல்லலாம் என மன நிம்மதியுடன், தன்னை சுற்றி நடப்பது தெரியாமல் செய்தி தாளை கோபுரம் போல முகத்தின் முன் உயர்த்தி இருந்த முறுக்கு மீசையின் பக்கத்தில் உட்கார்ந்தேன். “கூ.....” என்ற சத்தத்துடன் இரயில் கிளம்ப பக்கத்து இரயிலில் இருந்த்வர்களும் வந்து ஏறினர். கூட்டம் கலை கட்ட தொடங்கியது, மெல்ல நகர்ந்ததும் சமோசாய்ய்ய்ய்...” என்ற சத்தத்துடன் ஒரு சிறுவன் ஏறினான், அனேகமாக அவனுக்கு பதினைந்து பிராயத்துக்கு உள் தான் இருக்க வேண்டும் என தோனிற்று.
இரயில் கொஞ்சம் வேகம் பிடிக்க தொடங்கியது, “ஏங்க! திருவான்மையூர் வந்தா சொல்லுரீங்களா?” என மெல்லிய குரலில் ஒருவர் என் தோலை தட்டி பின் இருக்கையிலிருந்து கேட்டார். நானும் மெளனம் சம்மதம் என்ற முறையில் இரயில் பெட்டியின் குலுங்கலுக்கு இனங்க தலையை ஆட்டினேன். ”ஏங்க அதான் வந்தா சொல்றேனு சொன்னேன்ல!” கம்பீரமாக ஒருவர், ”இல்லங்க நா ஊருக்கு புதுசு....” என குரலை அழுத்தினார், அந்த மெல்லிய குரலுக்கு சொந்தகாரர் நிறைய பேரிடம் கேட்டு இருக்க வேண்டும் என யூகிக்கிறேன். சென்னை கோட்டையை வந்து அடைந்தது. என் எதிரே ஒருவர் விட்டு போன இடத்தை ஒரு இஸ்லாமிய நண்பர் வந்து நிரப்பினார் ஹலோ.. ஸார் நான் கிருஷ்ணன் பேசுறேன்....” என்று இஸ்லாமியரின் பக்கத்தில் இருந்தவர் கைபேசியில் கூற சாதி மதம் பார்க்காத நண்பன் தாண்டா எங்க இரயிலு வண்டி  என்ற சினிமா பாடல் தான் நியாபகத்துக்கு வந்தது.
            ஏங்க இன்றைக்கு என்ன சூடான செய்தி?” என கிருஷ்ணனுக்கு பக்கத்தில் இருந்த கருப்பு சட்டைக்காரர் கேட்க, “அட என்னங்க புதுசா இருக்க போகுது எப்போதும் போல அரசியல் ஊழல் இல்லையென்றால் நடிகையின் இரண்டாம் திருமனம்என கை பேசியை சட்டை பையில் வைத்த வண்ணம் கிருஷ்ணன்.
            அப்ப சாமியார் விவகாரம் முடிஞ்ஞிடுசா என்ன?” என கேலியாக் மற்றொருவர் கூற, எல்லோருடைய உதடுகள் விரிய நானும் சற்றே சிரித்தேன். “இன்றைக்கு சூடான தகவல் எதும் இல்லை போல, பழைய விஷயத்தையே போட்டு இருக்காங்க மூணு ரூபாய் தண்டம்கம்பீரமான குரலில் மீசையை முறிக்கினார். “அப்ப இன்னைகும் சாமியார் தலை தானா!!! ..” கேலி பேச்சுக்காரர் முடிக்க, ”சாமியார்களே இப்படிதாங்க!! தேவலோகத்துக்கு போகபோறோம்னு காமத்த பூமியில் இறக்கி வைக்குறாங்க போல?” சிறிது நேரம் அமைதிக்கு பின் கிருஷ்ணர் கோபமான குரலில் தொடங்க ஸாரோட சட்டை மாதிரியே தான் அவரது பேச்சும் இருக்கு” , “அய்யோ!! நான் அப்படி சொல்லலேங்க பொதுவாக சாமியாரின் மீது உள்ள கருத்தை சொன்னேன், ” என்று கருப்பு சட்டைக்காரர் முடித்தவுடன் சற்றே அமைதி நிலவியது.
            ஸார் திருவான்மயூர் இன்னும் எத்தனை டேஷன்?” மறுமுறையும் மெல்லிய குரலில்,மற்றவர் முனுமுனுத்தபடி ஹ்ம்ம்ம்... இன்னும் ஆறு ஏழு இருக்கு பெறியவரே!” என பதில் அளித்தனர், ”சமோசாய்ய்ய்ய்ய்...” “எவ்வளவுப்பா” “ரெண்டு அன்ஜு ஸார்” “இதுலையும் விலைவாசிய பாருங்க.. இந்தா பா”.... “சமோசாய்ய்ய்ய்ய்..” என கூவியபடி சிறுவன் நகர்ந்தான். முறுக்கு மீசை காரர் ஏன் ஸார் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா என்ன?” பதிலளித்தார் கறுப்பு சட்டை அப்படியும் இல்லை மூடநம்பிக்கையை நம்ப மாட்டேன்” “அப்ப சாமி கும்முடுவீங்களா?” தலையை உயர்த்தி சலித்த குரலில் இல்லைங்க”, சிரிப்பு கலந்த பதிலில் அப்ப பெரியார் பக்த்தன் போல?” ”இல்ல அவருடைய கருத்து ஒரு சிலத(சில) தான் பின்பற்றுவதுஎன கருப்பு சட்டை முடிப்பதற்க்குள், “! அதனால தான் சாமியாரை குறை சொல்லுறீங்களோ!!” என்றார் கிருஷ்ணர்.
            விவாதம் வருமோ என மனசுக்குள் தோனிற்று, அரசியல் விவாதத்தை கூட அடக்கிவிடலாம், ஆனால் கடவுளை பற்றி பேசினால் அது ஒருவரின் பிறப்பை பேசுவது போல ஆகிவிடும். கருப்பு சட்டை பதில் அளிக்க கூடாது என மனசுக்குள் நினைத்து கொண்டு இருக்கும் தருனம், கேலி பேச்சுக்காரர் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு! சாமியார் படம் தான அதிக ஓட்டம் ஓடுதுஅவருக்கு பக்கபலமாக இன்னொருவர் அதானே! சாமியார் தப்பு செஞ்சதுனால தான சொன்னாறு”. “ஏன் தப்பு செய்யாத சாமியார் எவ்வுளோ பேர் இருக்க்காங்க, நம்ம பாபா(இமையமலை அடிகள்) இருக்காரே!!!” கிருஷ்ணரின் பதிலை கேலி செய்தபடி எனக்கு தெரிந்த ஒரே பாபா ரஜினி தான், அவரையா சொல்றீங்க!”
            சாமி விஷயத்துல விளையாட்டு வேண்டாம் ஸார்கோபத்துடன் கிருஷ்ணர், “அதே தாங்க நானும் சொல்றேன், சாமியார்கள் விளையாடுவதற்க்கு சாமிகள்(கடவுள்) தான் கிடைத்தாங்களா..” என சொல்லிவிட்டு சற்றே தலையை ஆட்டி சிரித்தார் கருப்பு சட்டை.
            நம்பிக்கை இல்லாத உங்களுக்கு எங்க கடவுளுடைய சக்தி எங்க தெரிய போகுது, உங்க கிட்ட போய் ஏன் நான் விவாதம் பண்ணனும் விடுங்க! இப்படி உங்களை போல பேசியவர்கள் எத்தனையோ பேர் இப்போது எங்க இருக்காங்கனு உங்களுக்கும் தெரியும்.” சற்று இடைவேளை விட்டு உங்களுக்கு எல்லாம் கடவுளின் கிளைகளை(ஜாதி) வைத்து அவர் அவர் கிளைகளில் ஓட்டு கேட்கத்தான் தெறியும், ஆனால் யாராவது பக்திமான்கள் தப்பு செய்துவிட்டால் உடனே பகுத்தறிவாதி ஆகி விடுகிறீர்கள் என கோபத்துடன் முடித்தார்.
            அவர் சொல்லுவதும் கொஞ்சம் நியாயமாக தான் இருக்கிறது என எனக்கு அப்பொழுது தோன்றியது. அப்படியே யோசித்தப்படி வெளியே பார்த்தேன், கண் முன்னே தோன்றிய சென்னை மெரினா கடற்கரை, சற்றே நம்மை வியக்க செய்கிறது, அந்த வியப்பு இயற்கையின் அழகு என்றாலும் அந்த அழகை படைத்தவரை எண்ணி சிலிர்க்க வைக்கிறது, இரயிலின் வேகத்தில் அந்த பெருங்கடலை சிறு நேரத்தில் கடந்தோம். சற்றே கருப்பு சட்டைக் காரர் குரல் கேட்க உள்ளே திரும்பினேன், “நீங்க சொல்றது சரித்தான், ஆனா பகுத்தறிவாதி எந்த தப்பு செஞ்சாலும் அத அவருடைய சொந்த உரிமைனு எடுத்துப்பாங்க, பிடிக்கலனா அவர விட்டு விலகிடுவாங்க, பெரியார் விஷயத்துல நடந்த மாதிரி. ஆனா ஆன்மீகம் என்பது கடவுளின் மீது நாம் வைக்க கூடிய நம்பிக்கை அதில் இருக்கும் ஒருவர் தப்பு செய்தால் அது அந்த ஆன்மீக வழக்கத்தை பின் பற்றும் அனைவரையும் பாதிக்கும்
            கிருஷ்ணரின் பதிலை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மீசைக்காரர் இதற்கு நாங்க என்ன பண்ண முடியும், சாமியார்கள் எல்லாம் நல்லவர்கள் என நம்பித்தான் போகிறோம் ஆனால் அவர்கள் இப்படி செய்வார்கள் என எங்களுக்கு என்ன தெரியும்” , ”அதானே!”. என நெகிழ்ச்சியுடன் கூறினார் கிருஷ்ணர். பக்கத்தில் இருந்த இஸ்லாமிய நண்பர் என்ன நினைத்தார் போலும் தெரியவில்லை அங்கிருந்து எழுந்து சென்று விட்டார், இங்கு வாழும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களில் அவரும் இருப்பார் போலும் என நினைத்து கொண்டேன்.
            கேலி பிரியர், “ஏங்க அவர் அப்படி சொல்லவில்லை, சாமியார்கள் தான் ஏமாத்துராங்கனு தெரியுதுல அப்பறம் ஏன் திரும்ப திரும்ப போறிங்கனு கேக்குறாறு?” என சொல்லிவிட்டு இஸ்லாமியர் இடத்தை பிடித்தார். ”எனக்கு என்னமோ இந்த விவாதம் முடியும் போல தோனலஎன்று என்னுள் ஒரு குறல் கேட்டது. என்ன நடந்தது என யூகிக்கும் நேரத்தில் எல்லோருடைய குரலும் உயர்ந்து விட்டன. ஒருவரை ஒருவர் அடித்து கொல்(ள்)வது போல பேசிக்கொண்டனர். இந்த சண்டையின் விளைவு என்னவாக இருக்க முடியும், இதில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வெண்டும் என யோசிக்கும் போது என் பின் இருந்து ஒருவர் என் காதின் அருகே மெல்லமாகதம்பி!!! திருவான்மையூர் வந்துடுச்சா?.